Monday, January 8, 2007

என்னென்று சொல்ல

தலையோ நரைத்து விட்டது
நடையோ தளர்ந்து விட்டது
பார்வை குறைந்து விட்டது
நினைவுகள் மறந்து விட்டது
எனக்கும் வயதாகி விட்டது

உள்ளங்கள் சுருங்கி விட்டது
உறவுகள் உடைந்து விட்டது
நல்லநட்பு நலிந்து விட்டது
தன்னலம் உயர்ந்து விட்டது
பொதுநலம் படுத்து விட்டது

பொய்கள் பெருகி விட்டது
உண்மைகள் உறைந்து விட்டது
துணிச்சல் தொலைந்து விட்டது
பயத்திடம் பணிந்து விட்டது
இவ்வுலகம் இருண்டு விட்டது

புதியதோர் உலகம் செய்ய
பாரதியாய் பிறக்க வில்லை
அடுத்த பிறவி ஓன்றெடுக்க
பிரம்மா என்னை பணித்திடு
சக்தியுடன் என்னை படைத்திடு

தீமைகளை தீயினால் தீயிட்டு
நன்மைகள் நன்மக்கள் நல்வாழ்வு
இவையே இவ்வுலகென இயக்கவே
என்னைவொரு கிரியா ஊக்கியாய்
உருவாக்கி விடு இறைவா!