Monday, October 25, 2010

POLARIS நண்பர்கள்

நாவுடையார், தம்மிடை முதற்கடவுள் உடையார்
பெயரில் செல்வமுடையார் தன்வேலை மட்டுமன்றி
பிறன்வேலை திறன்பார்ப்பார் நன்மதிப்பீடு செய்வார்
சிறந்த முடிவுசெய்வார், எனினும் முடிவில்லாதவரே!

இன்முகத்தார், இனிப்பகத்தார், நல்ல பண்புடையார்.
சொற்க்களில் சிக்கனம், செயல்முடிப்பார் இக்கணம்
இங்குவரும் இளையோர்க்கு இவரொரு இலக்கணம்.
மொத்ததில் சிறந்தவர், வெல்வதற்க்கென பிறந்தவர்.

வயதில் சற்றேசிறியார், உருவில் சுற்றுப்பெரியார்.
தான்கொண்ட உடலளவு பெரும் உள்ளமுடையார்.
இவர்செய்நகை தங்கமில்லை புன்னகை தங்கமே
நட்பும் பலநற்பண்பும் இவரிடத்தென்றும் தங்குமே.

அளவில்லாத அன்புகொண்ட நெல்லை நண்பர்,
மற்றவர்க்கு உணவளித்த பின்னே தான்உண்பர்.
ஆவலுடன் எதிர்பார்ப்பார் தன்திருமண நாளை,
துணையிடம் அடங்கும்பார் இக்கட்டிளங் காளை!

ஆங்காங்கிடத்து மென்பெருள் மதிப்பீடு செய்வார்,
நம்ப்லாம். மதிப்பீடு செய்தால்ஓரு குறையுமிராது.
கொண்டதுயரம் சொல்லின் இவர்கொள்வார் துயரம்
பெரியதுஉள்ளம் சிறியதுஇவர் உயரம் என்பேனோ?

மெத்தப்படித்தவர், சிந்தனயில் தனித்து இருப்பவர்,
பெருங்குடியார், நமக்கெல்லாம் இன்று தலையானார்,
நமக்குவேலை தருவதையே வேலையென நின்றார்,
இவர்பற்றி நான்சொல்ல நான்குவரிகள் போதாதே!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home