Sunday, September 5, 2010

சிவகாசி

வாழ்க்கைத் தரம் தீப்பெட்டி அளவில்தாம் இருக்கின்றன
துன்பங்கள் பெருஞ் சாட்டையாய் மாறி சுடுகின்றன
மருந்தென்பது வெடிகளில் மட்டும் கிடைக்கின்றன.
நோய்கள் எம்மை சக்கரமாய் சுழற்றி அடிக்கின்றன

விலைவாசி எல்லோர்க்கும் போல் இங்கேயும் ராக்கெட்டு
சூடிக்கொள்ளும் பூக்கூட மல்லிப்பூஅன்றி வெறும் மத்தாப்பூ
டபுள்சவுண்டு இல்லை எங்கும் ஒரேசவுண்டு ஒப்பாரிதான்
சிரிப்பென்பது வருடத்தில் ஒருமுறை வரும் தீபாவளிதான்

லக்ஷ்மி என்பவள் வீட்டில்இல்லை வெடிகளில் மட்டும்
ஒட்டுக்கு வரும்பணம் சரவெடியாய் சற்றே மகிழ்வூட்டும்
தேர்தல் வாக்குறுதிகள் பின்வெறும் புஸ்வாணம் ஆகும்
எங்களுக்கும் காலம்வரும் என்றே தினம்நம்பி வாழும்