Tuesday, January 25, 2011

பல நாட்கள் இப்படித்தான்

காலை முதலேஎன் நேரம் சரியில்லை
செருப்பு அறுந்து செலவு வைத்தது
ஏதோ கல்யாணம், கட்டாய மொய்ப்பணம்
நாள் முழுதும் மேலதிகாரி குடைச்சல்
தலைவலி, வழக்கமான தேனீர்கடை லீவு
பீக்ஹவர் நேரத்தில் மாலை பஸ்பயணம்
வீட்டுக்கு வந்ததும் மனைவி நச்சரிப்பு
இதில்லை அதில்லை இதுவேணும் அதுவேணும்
இருக்கும் எரிச்சலில் கண்டபடி அடித்துவிட்டேன்
பாவம் குழந்தை, பென்சில்தானே கேட்டது