Monday, March 29, 2010

தேர்தல்

கஞ்சிக்கு தான் வயிறு காயுது

கலர் டிவிதான் இலவசமாய் பாயுது

சீரான ரோடு ஒண்ணு இங்கில்ல

சீரியலுக்கு டிவியில் கொறச்ச்ல் இல்ல

சிலிண்டர் வெலை சூப்பரா ஏறுது

காஸ் ஸ்டவ் ·ப்ரீயாக கெடைக்குது

வாய்க்கு ருசியா துண்ண சோறில்ல

வாக்குறுதியால் வவுறு ரொம்பவில்ல


தாகமா எடுக்குது தண்ணிக்கு தவிக்குது

கட்சிகள் கவலபடாம வோட்டுகள குவிக்குது

தேர்தல் வந்தால் ஒருமாசம் கொண்டாட்டம்

அப்புறமா அஞ்சு வருஷம் திண்டாட்டம்

கொடி எல்லாத்தயும் எறக்கிக் கட்டு

வீராப்பா வேட்டியத்தான் மடிச்சு கட்டு

பாழும் அரசியல ஒழிச்சுக் கட்டு

பாசமான குடும்பத்த நெனச்சுப் புட்டு

வேலயமட்டும் பாரு, உருப்படும்டா ஊரு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home