கவிதை ஒன்றே
நான் படித்த பல கவிதைகள்
என் நினைவில் நின்றாலும்
இதயத்தில் பிடித்து நின்ற கவிதை
நீ மட்டும் தான்.
இலக்கணத்தில்
இதுவரை படித்ததில்லை
இரெண்டெழுத்தில் ஒரு கவிதை
உன் பெயர்
உன்னைப் பார்த்த பின்னே உணர்ந்தேன்
இரண்டடி நான்கடி மட்டுமன்றி
ஐந்தடி ஆறுஅங்குலத்திலும் கூட
கவிதை உலகில் உண்டென்று!!
கவிதை என்று சொன்னாலே
சீச்சீய்ய் என்றிருந்த நான்
உன்னுடன் வாழ்ந்த பின்னே
உணர்ந்தேன் நீ சொல்லும்
சீச்சீய்ய் கூட கவிதையென்று
இரு வரிக் குறளில் கூட
ஒரு பொருள் தான் உண்டு
பல பொருள் பொதிந்து இருக்கும்
கவிதை ஒன்று, இரண்டே வார்த்தையில்
உன் இதயம்.
எனக்குத் நன்றாகத் தெரியும்
உனக்கு கவிதைகள் படிக்க
நேரமே இல்லை என
உனக்காகவே எழுதினேன் உலகின்
ஒன்லி ஒரெழுத்துக் கவிதை
நீ!!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home