Monday, December 18, 2006

கவிதை - காதல் சுவடி

ண்ணே காதல் மட்டுமல்ல
காத்திருத்தலும் கடினம் தான்.
கிடைத்து விட்டால் மனமுவக்கும்
கீழ்வானும் கைக்கு எட்டும்
குடும்பம் குழந்தை குதூகலம்
கூடிவாழ்ந்தால் கோடி இன்பம்
கெஞ்சி இறைஞ்சும் என்மனம்
கேட்டு மாறுமோ உன்மனம்?
கைபிடிப்பாயா? கை விடுவாயா?
கொள்வாயா? எனை கொல்வாயா?
கோவிலில் திருமணமா இல்லை
கெளதமனின் போதிமரத்தடி தானா?

Labels: , ,

1 Comments:

At January 8, 2007 at 4:44:00 AM PST , Blogger Unknown said...

காதல் சுவடி கலக்கல் :)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home