பதில் கவிதை
ஆ, இதென்ன கவிதை போல் தெரிகிறதே!!
என் அன்பு நண்பனுக்கு இன்னும் மணமாகவில்லை
இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறான்
அதனால் இன்னும் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான்
நிற்க.
உன் இதழில் புன்னகை வரவேண்டி
எழுதிய வேடிக்கை வரிகள் அவை
சற்று நேரம் சிரிக்கலாம்
பின் அதை மறக்கலாம்.
அன்பு பாராட்டும் உன் கவிதையில்
உன் அன்பு நெஞ்சத்தைக் கண்டேன்
அது கடல்போல் என்றும் வற்றாது பொங்க
கடவுளையும் கொஞ்சம் வேண்டிக் கொண்டேண்.
நண்பா, கொண்ட அன்பால் பல நல்லவை
பலவாறு பெருகப் பார்த்திருப்பாய் நீ
ஆனால் அந்த அன்பால் ஒன்று குறைவதும்
ஒன்று கூடுவதும் எப்படி என விளக்கவா?
ஆணும் பெண்னும் திருமணம் செய்து
கொண்ட அன்பால் இரண்டு உள்ளங்கள்
ஒன்றாகக் குறைந்த்து,
ஒன்றுகூடியதால் ஒன்று கூடியது
இந்த வருடத்தில், நாங்கள் காத்திருக்கிறோம்
உன்னிடமிருந்து அழைப்பிதழ் வர
அன்புடன் உன்னிடம் உரிமையாய் அதட்டுகிறேன்
டேய் கல்யாணம் பண்ணிக்கோடா. வாழ்க

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home