Tuesday, December 12, 2006

சிலேடைச் சிதறல்கள்

கழுத்தில் கயிறிருக்கும், மணிமணியாய் பேசும்
காதுமடல் சிவக்கும், கண்டபடி செலவுவைக்கும்
காலப்போக்கில் மற்றவர் கொண்டதே சிறந்ததென
தோன்றும் கைப்பேசியும் கைத்துணையும் ஒன்றே!

குறை காணும் உரக்கப் பேசக்கேட்கும்
புட்டிகள் தேடும் அன்புக்குட்டிகள் தேடும்
ஆட்டம் போடும் தக்கதுணை பார்க்கும்
பருவம் இளமையோ இல்லை முதுமையோ?

சற்றே கசக்கும் அனுபவம் கொண்டவர்
சர்க்கரை சேர்ப்பர் முழுதும் உட்கொண்டால்
புத்துணர்ச்சி கிடைக்கும் பின்மற்றவர்க்கு நாம்
பரிந்துரைக்கும் அறிவுரையும் கா·பியும் ஒன்று

ஆழமுண்டு அதில் மூழ்கின் முத்துண்டு
இணைவுண்டு இது பெருகுவதும் உண்டு
புயலெனில் அழிவும் உண்டு. உலகெங்கும்
நிறைந்துள்ள கடல் காதல்போல் ஆனதே.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home